
ஐதராபாத் : ”தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் பதவியில் ரேவந்த் ரெட்டியை நியமிக்க அம்மாநில பொறுப்பாளரும், விருதுநகர் எம்.பி.,யுமான மாணிக்கம் தாகூர் ரூ.50 கோடி லஞ்சம் பெற்றுள்ளார்” என அம்மாநில காங்கிரஸ் கமிட்டி முன்னாள் செயலாளர் கவுசிக் ரெட்டி குற்றம்சாட்டினார்.
தெலுங்கானாவில் உள்ள கூசூராபாத் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி தனக்கு வாய்ப்பு அளிக்க இருப்பதாக காங்., செயலாளர் கவுசிக் ரெட்டி அலைபேசியில் பேசியது போன்ற ஆடியோ வெளியானது. இதுபற்றி 24 மணிநேரத்தில் விளக்கம் அளிக்கும்படி காங்., ஒழுங்கு நடவடிக்கை குழு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக கவுசிக் ரெட்டி சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
![]() |
இந்நிலையில் தெலுங்கானா காங்., பொறுப்பாளர் மாணிக்கம் தாகூரிடம் ரூ.50 கோடி கொடுத்து மாநில காங்., தலைவர் பதவியை ரேவந்த் ரெட்டி பெற்றுள்ளார் என கவுசிக் ரெட்டி குற்றம்சாட்டினார்.இந்த குற்றச்சாட்டை மாணிக்கம் தாகூர், ரேவந்த் ரெட்டி மறுத்துள்ளனர். மேலும் கவுசிக் ரெட்டிக்கு, மாணிக்கம் தாகூர் வக்கீல் நோட்டீஸ்
அனுப்பியுள்ளார். அதில், பொய்யான குற்றச்சாட்டு தனது பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளது. இதனால் 7 நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2801953