
பாகிஸ்தானில் கொரோனா பரவல் திடீரென தீவிரமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவா்கள் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,026 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; இது, கடந்த 3 மாதங்களில் இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கை என்று தெரிவித்தனர்.
இத்துடன், பாகிஸ்தானில் 1,034,837 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது; 23,422 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்; 69,756 பேர் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Source: https://canadamirror.com/article/pakistan-corona-cases-recently-increased-1627846101