
இன்று ஜூலை 14 ஆம் திகதி தேசிய நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேசிய நாள் நிகழ்வின் ஒரு சுருக்கமான கண்ணோட்டம். இவ்வருடத்துக்கான நிகழ்வில் 4.300 இராணுவ வீரர்கள் கலந்துகொள்கின்றனர். 73 விமானங்கள், 24 உலங்குவானூர்திகள், 221 கவச வாகனங்கள், 200 குதிரைப்படைகள் என மொத்தம் 5000 இற்கும் அதிகமானோர் கலந்துகொள்கின்றனர்.

****** Bastille முற்றுகை முடிவடைந்து முதலாவது ஆண்டான 1790 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் திகதி முதன் முதலாக தேசிய நாள் நிகழ்வு கொண்டாடப்பட்டது. Bastille சிறைச்சாலை மக்கள் புரட்சியால் தகர்த்தெறியப்பட்டு, சிறைக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஜூலை 14. 1789 ஆம் ஆண்டு மன்னர் ஆட்சி அழிக்கப்பட்டது. பின்னர் அதுவே பிரான்சின் தேசிய நாளாக அறிவிகப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே இந்த தேசிய நாள் கொண்டாடப்படுகின்றது. இவ்வருடம் 230 ஆவது ஆண்டு தேசிய நாள் ஆகும். ஐரோப்பாவில் கொண்டாடப்படும் மிக பழமையானது, மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பும் கொண்ட தேசிய நாள் இந்த ஜூலை 14 நிகழ்வுகள்.
.jpg)
***** 2021 ஆம் ஆண்டுக்கான இன்றைய நிகழ்வில் பிரெஞ்சு இராணுவத்தினரால் புதிய நவீன கவச வாகனம் ஒன்று காட்சிக்கு கொண்டுவரப்படுகின்றது. ஒரு யுத்தம் ஒன்றில் ஈடுபட்டும் பல கவச வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். système d’information தொழில்நுட்பம் மூலம் இந்த கவச வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன், கவச வாகனம் தொடர்பான அனைத்து தரவுகளையும் கட்டுப்பாட்டு அறை அறிந்துகொள்ளும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் முதன்முறையாக இந்த வாகனத்தை இன்றைய அணிவகுப்பில் அறிமுகம் செய்கின்றது.
Source: http://www.paristamil.com/tamilnews/francenews-MTk1MDQyMTExNg==.htm