ஜனாதிபதியின் தடுப்பூசி பிரச்சாரம், சுகாதார பாஸ் நெருக்கடிகள், நான்காம் அலையின் போது தடுப்பூசி போடாதவர்கள் மாத்திரமே தனிமைப்படுத்தப்படுவார்கள் எனும் அரசின் எச்சரிக்கை என ஒட்டுமொத்தமாக அறிவிப்புகளும், மக்களை தடுப்பூசி மையம் நோக்கி இழுத்துள்ளது. கிட்டத்த 800.000 பேர் புதன்கிழமை தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை மீண்டும் 800.000 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். மிக துல்லியமாக 786.764 பேர் நேற்று ஒரே நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதுவரை 36,415,465 பேர் தங்களது முதலாவது தடுப்பூசியினை போட்டுக்கொண்டுள்ளனர். இவர்களில் 28.684.069 பேர் தங்களது இரண்டாவது தடுப்பூசியினையும் போட்டுக்கொண்டுள்ளனர். மேலதிக செய்திகள்! * பிரான்சில் கண்டறியப்படும் கொரோனா தொற்றுக்களில் 67.5% வீதமானவை டெல்டா திரிபு கொரோனா வைரஸ் ஆகும். இதுவே தலைநகர் பரிசில் 79.9% வீதமானவை டெல்டா திரிபு வைரஸ் ஆகும். * Pyrénées-Orientales மாவட்டமே தற்போது பிரான்சில் அதிகூடிய தொற்றுக்கள் கண்டறியப்பட்ட மாவட்டமாக உள்ளது. இங்கு ஒவ்வொரு 100.000 பேருக்கும் 210.9 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. * கிட்டத்தட்ட 8 மாதங்களின் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை ஜூலை 16 ஆம் திகதி ஈஃபிள் கோபுரம் திறக்கப்படுகின்றது. * பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 50.000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Source: https://www.paristamil.com/tamilnews/francenews-MTk1MjEwMDAzNg==.htm