நாடு முழுவதும் நேற்று ஒரே இரவில் 200 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் இல் து பிரான்சுக்குள் கைது செய்யப்பட்டனர். 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு இந்தகைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. மொதமாக 249 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Val-de-Marne மற்றும் Seine-et-Marne மாவட்டங்களைச் சேர்ந்த Pontault-Combault மற்றும் Noisiel ஆகிய நகரங்களில் இரவு முழுவதும் மோட்டார் பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் எழுந்ததாகவும் அங்கு 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பல்வேறு இடங்களில் மோட்டார் பட்டாசுகள் கைப்பற்றபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://www.paristamil.com/tamilnews/francenews-MTk1MDYxODYzNg==.htm