
இன்று புதன்கிழமை காலை பரிசில் இடம்பெற்ற விபத்தொன்றில் 20 வயதுடைய இளைஞன் ஒருவன் சாவடைந்துள்ளான். காலை 9.30 மணி அளவில் Boulevard de la République பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மிதிவண்டியில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்த குறித்த இளைஞன் தனது வேலைத்தளத்துக்கு அருகே சென்றிருந்த போது கனரக வாகனம் ஒன்றுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தான். உதவிக்குழு சம்பவ இடத்துக்கு வந்தடையும் முன்னரே குறித்த இளைஞன் சாவடைந்துள்ளான். விபத்தை அடுத்து கனரக வாகனத்தை ஓட்டி வந்திருந்த சாரதி மிகுந்த அதிர்ச்சியடைந்திருந்ததாகவும், அவருக்கு உளநல சிகிச்சைகள் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://www.paristamil.com/tamilnews/francenews-MTk1NjY0Mjk5Ng==.htm