உலக நாடுகளின் தலைவர் சந்திக்கும் நிகழ்ச்சிகள் தொடர்பில் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால், உலக நாடுகளின் தலைவர்களின் சமையல்காரர்கள் சந்தித்துக்கொள்ளும் அரிய நிகழ்ச்சி பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது.
பாரீஸில் நடைபெறும் இச்சந்திப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மொனாக்கோ உள்ளிட்ட 20 நாட்டு தலைவர்களின் தலைமை சமையல்காரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்கள் தத்தமது நாட்டு உணவு வகைகள் குறித்து பரஸ்பரம் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர்.
மேலும், பிரான்ஸ் நாட்டு உணவு வகைகள் குறித்து அந்நாடெங்கும் பயணிக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அத்துடன் ‘மக்களை அரசியல் பிரிக்கிறது – ஆனால் உணவு எல்லாரையும் ஒன்றாக்குகிறது’ என்பதே தங்கள் தாரக மந்திரம் என இந்த சமையல்காரர்கள் கூறுகின்றனர் .
Source: https://canadamirror.com/article/incident-attracted-france-meet-leaders-chefs-1626350998