டெல்லி: பிரான்ஸுடன் இந்தியா மேற்கொண்ட ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்படும் நிலையில் அதுகுறித்து விசாரிக்க அந்நாட்டு நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த விசாரணை கமிஷன் முன்னாள் அதிபர் பிரான்காய்ஸ் ஹோலந்து (ஒப்பந்தம் கையெழுத்தான போது அதிபராக இருந்தவர்), தற்போதைய அதிபர் இமானுவேல் மேக்ரான் (ஒப்பந்தம் கையெழுத்தான போது நிதியமைச்சராக இருந்தவர்) உள்ளிட்டோர் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என தெரிகிறது
இந்திய விமானப் படையை நவீனப்படுத்தும் நோக்கில் அதிநவீன போர் விமானங்களான பிரான்ஸ் நாட்டின் ரஃபேல் போர் விமானம் வாங்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானத்தின் விலை ரூ 526 கோடி என்ற வீதத்தில் 126 விமானங்கள் வாங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தது. இதையடுத்து பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி ரஃபேல் விமானங்கள் வாங்க ஒரு புதிய ஒப்பந்தத்தை செய்து கொண்டார். அதன்படி ஒரு விமானம் ரூ 1670 கோடி என்ற வீதத்தில் 36 விமானங்களை வாங்க ரூ 59 ஆயிரம் கோடிக்கு வாங்க மோடி ஒப்பந்தத்தை செய்து கொண்டார். காங்கிரஸ் ஆட்சியில் 526 கோடிக்கு பேசப்பட்ட விமானத்தை ரூ 1670 கோடிக்கு வாங்கியது ஏன் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள்
இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்திற்காக பிரான்ஸின் டசால்ட் நிறுவனம் இந்தியாவின் துணை நிறுவனமான டெப்சிஸ் சொலுஷனுக்கு ரூ 8.6 கோடியை கமிஷனாக கொடுத்ததாக கண்டுப்பிடிக்கப்பட்டது. இது பிரான்ஸ் ஊழல் தடுப்பு துறை கண்டுபிடித்ததாக அந்த நாட்டு நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. ரஃபேல் ஒப்பந்தத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மேற்கொண்ட அறிக்கைகளின் மூலம் பல முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேடுகளை விசாரிக்க ஜியான் பிரான்காய்ஸ் போநெர்ட் என்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக பிரான்ஸ் பொது நல வழக்கு சேவைகளின் தலைவர் எலியான் ஹவுலெட் இந்த வழக்கை விசாரிக்க மறுத்தார். இதையடுத்து போநெர்ட் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.