
நியூஸிலாந்து பெர்த்திலுள்ள தனிமைப்படுத்தல் விடுதியொன்றிலிருந்து தப்பித்துச்சென்ற நபர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பயணக்கட்டுப்பாடுகளைமீறி குயின்ஸ்லாந்திலிருந்து வந்த 39 வயது நபருக்கு பெர்த்திற்குள் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதுடன் அங்கிருந்து 48 மணிநேரங்களுக்குள் திரும்பிச்செல்லுமாறு பணிக்கப்பட்டது.
அத்துடன் குயின்ஸ்லாந்து திரும்புவதற்கான விமானப்பயணம் மேற்கொள்ளும்வரை பெர்த்திலுள்ள Riverdale தனிமைப்படுத்தல் விடுதியில் அந்நபர் தங்கவைக்கப்பட்டார்.
இந்நிலையில் நான்காவது மாடியில் தங்கவைக்கப்பட்ட குறித்த நபர், தனது அறையிலிருந்த படுக்கைவிரிப்புகளைச் சேர்த்து முடிச்சிட்டு அதைப் பயன்படுத்தி ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்து ஓடியிருக்கிறார்.
இதையடுத்து சுமார் 8 மணிநேரங்கள் கழித்து Mount Lawley பகுதியில் வைத்து குறித்த நபரைக் கைதுசெய்த பொலிஸார், தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமைக்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்ததாகவும் கூறப்படுகின்றது.
Source: https://canadamirror.com/article/person-who-escaped-isolation-hostel-in-perth-1626945173