
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
Segou புறநகரில் பாரம் ஏற்றிக் கொண்டு சென்ற கனரக லாரியின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே சென்ற பேருந்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர விபத்தில் இரண்டு வாகனங்களும் உருக்குலைந்து காணப்படுகிறது.
மேலும் விபத்தில் 41 கொல்லப்பட்டதாகவும், 33 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Source: https://canadamirror.com/article/accident-in-mali-41-killed-1628058723