போபால்: மத்திய பிரதேச மாநிலம் பந்தேல்கண்ட் பகுதியில் அமைந்துள்ளது பிந்த் மாவட்டம். இங்கு சில தினங்களாகக் கனமழை பெய்ந்து வருகிறது.
மழையால், பிந்தில் உள்ள சிறைச்சாலையில் ஒரு பாழடைந்த கட்டடம் இன்று காலை 5:00 மணியளிவில் திடீர் என இடிந்து விழுந்தது. அங்கிருந்த 66 கைதிகளில் 22 பேர் இடிபாடுகளில் சிக்கினர். மீதம் உள்ளவர்கள் வெளியேறிய போது நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி காயமுற்ற பலரும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த சிறைச்சாலை மிகவும் பழமையானது. இங்கு மொத்தம் 255 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சிறைக் கட்டடம் இடிந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2813515