
புதுடில்லி :’கோவிஷீல்டு தடுப்பூசி யின் இரண்டு ‘டோஸ்’ களுக்கான இடைவெளியை குறைக்கும் எண்ணம் இல்லை’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.கோவிஷீல்டு இரண்டு டோஸ் தடுப்பூசிகளுக்கான இடைவெளி முதலில் நான்கு வாரமாகவும், பின், 6- 8 வாரமாகவும், இதன்பின், 12 – 16 வாரமாகவும் அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் கோவிஷீல்டு இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இதை, என்.டி.ஏ.ஜி.ஐ., எனப்படும் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு மறுத்துள்ளது. இந்த குழுவின் தலைவர் டாக்டர் அரோரா கூறியதாவது:
![]() |
கோவிஷீல்டு இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை குறைக்கும் எண்ணம் எதுவும் இல்லை. இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி தொடர்ந்து 84 நாட்களாகவே இருக்கும்.
கால இடைவெளி அதிகரிப்பால் மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, என்.டி.ஏ.ஜி.ஐ.,வின் மற்றொரு அதிகாரி கூறுகையில், ‘கால இடைெவளியை குறைப்பது குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்’ என்றார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2831133