
புதுடில்லி: கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போடுவது பாதுகாப்பானது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிராக நம் நாட்டில் ‘கோவாக்சின் கோவிஷீல்டு’ என இரண்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் – வி’ தடுப்பூசியும் போடப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரே நிறுவனம் தயாரித்த இரண்டு ‘டோஸ்’ தடுப்பூசி வழங்கப் படுகிறது.இந்நிலையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கலந்து போடுவது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் கிடைத்த முடிவுகள் தொடர்பாக ஐசிஎம்ஆர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசியை கலந்து அளிப்பது தொடர்பான ஆய்வுகளில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளது. அப்படி போடுவது பாதுகாப்பானது மட்டும் அல்லாமல், சிறந்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது என தெரிவித்து உள்ளது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2819000