
சென்னை: தமிழக அரசால், மாணவர்களின் மருத்துவ கனவு கேள்விக்குறியாகி உள்ளதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா? என முதல்வரிடம் நேரடியாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் பல முறை வலியுறுத்தியும் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியதன் விளைவு; இன்று மாணவர்களின் மருத்துவக்கனவு கேள்விக்குறியாகி உள்ளது. எப்போதும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத இந்த அரசு. அதிமுக அரசு செயல்படுத்திய ‘நீட்’ தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கப பெறுவதில் இடையூறு ஏற்படுத்தாமல், தேர்வுக்கு மாணவர்களுக்கு அதிமுக அரசு அளித்தது போல் உரிய பயிற்சிகள் வழங்கி உறுதுணையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.
Source : https://www.dinamalar.com/news_detail.asp?id=2801621