
பெரம்பலுார்: அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவியர் இருவர் -ரஷ்யாவில் நடக்கும் விண்வெளி பயிற்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையை சேர்ந்த ஐ.ஏ.ஏ.ஏ. என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் 2021ம் ஆண்டுக்கான உலக அளவிலான வானவியல் ஆராய்ச்சிகள் தொடர்பான போட்டி நடந்தது. இப்போட்டியில் பங்கேற்று முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் ரஷியாவில் நடக்கும் விண்வெளி பயிற்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதில் அரியலுார் மாவட்டம் திருமானுார் அரசு மேல்நிலைப்பள்ளியின் ப்ளஸ் 1 மாணவியர் ரகசியா வேதாஸ்ரீ ஆகியோர் விண்வெளி பயிற்சியில் பங்கேற்க உள்ளனர்.

அந்த மாணவியரை கல்வி அமைச்சர் மகேஷ் விருது வழங்கி கவுரவப்படுத்தி உள்ளார். அரியலுார் சி.இ.ஓ. ராமன் டி.இ.ஓ. அம்பிகாபதி தலைமை ஆசிரியர் இன்பராணி ஆகியோரும் பாராட்டினர்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2804551