
ஈகுவடார் நாட்டில் சிறை கைதிகள் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. அந்நாட்டின் 2 சிறைகளில் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் நேற்று 18 பேர் உயிரிழந்தனர்.
நாட்டின் குவாயாகு மற்றும் லட்டாகியூங்கா சிறைகளில் நேற்று கைதிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் 18 கைதிகள் உயிரிழந்தனர். 9 போலீஸ் அதிகாரிகள் மற்றும் 35 கைதிகள் காயம் அடைந்தனர்.
இதனை தொடர்ந்து, போலீஸ் படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். லட்டாகியூங்கா சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்த 45 கைதிகளை போலீசார் பிடித்து கைது செய்தனர். கடந்த பிப்ரவரியில் நடந்த மோதல் சம்பவத்தில் 3 சிறைகளை சேர்ந்த 79 கைதிகள் கொல்லப்பட்டனர்.
Source: https://canadamirror.com/article/equator-country-prisoners-fight-18-death-1627000973