
சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உடந்தையாக இருந்த இரு பெண்களையும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
சென்னை
சென்னை டிபிசத்திரம் ஆர்.வி நகர் 1 வது தெரு பகுதியில் மாரியம்மன் கூல் பார் என்ற பெயரில் பெட்டி கடை நடத்தி வருபவர் பெருமாள் (48). இவரது கடையில் குட்கா பொருட்கள் விற்பனை நடைப்பெறுவதாக டி.பி. சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனால், போலீசார் கடையை சோதனை செய்த பொழுது கடையில் 30 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து பெருமாளை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் குட்காவை எங்கிருந்து வாங்கினார் என்பதை தெரிந்து கொள்ள அவரது செல்போனை கேட்ட பொழுது அதனை தரமறுத்ததால் போலீசாருக்கு அவர்மீது சந்தேகம் ஏற்பட்டு செல்போனை வாங்கி ஆய்வு செய்தனர்.
அதில் சிறுமிகள் பலருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்து அதனை பெருமாள் வீடியோவாக பதிவுசெய்து வைத்து இருந்தார். சிறுமிகளின் ஆபாச படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து உயர் அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல ஆணையத்திற்கு தகவல் தெர்வித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளை மீட்டு அவர்களிடம் இதுகுறித்து கேட்ட பொழுது மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.
சென்னை கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அவரது தாய்க்கு தெரிந்தே இந்த பாலியல் கொடுமைகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. சிறுமியின் 30 வயது தாய் பெருமாளுடன் கடந்த 2 வருடமாக தொடர்பில் இருந்து வந்ததுள்ளார். பின்னர் அந்த 30 வயது பெண்ணின் சகோதரியான 28 வயது பெண்ணுடனும் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது.
இந்த பழக்கத்தால் 30 வயது பெண்ணின் 9 வயது மகளையும் பெருமாள் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார். ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின் தாய், பெருமாளுடனான தவறான தொடர்பை துண்டிக்க முடியாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது மகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை அனுமதித்துள்ளார்.
பெருமாளின் பாலியல் சீண்டல்கள் எல்லை மீறி சிறுமியின் வீட்டுக்கு வரும் சிறுமியின் தோழிகளான 11 வயது மற்றும் 4 வயது சிறுமிகளையும் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார். மேலும், விசாரணையில் அந்த நபருடன் தொடர்பில் இருந்த பெண்ணின் 9 வயது மகள் அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி முதல் 17 வயது சிறுமி வரை 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
மேலும் சிறுமிகளை பாலியல் கொடுமை செய்வதற்கு 500 முதல் 2,000 ரூபாய் வரை கொடுத்தது தெரியவந்தது. சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததை வீடியோவாகவும் எடுத்து வைத்திருந்த அந்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உடந்தையாக இருந்த இரு பெண்களையும் போக்சோவில் கைது செய்தனர்.