
புதுடில்லி: ஜார்கண்ட் நீதிபதி ஜீப் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கின் விசாரணையை துவக்கியுள்ள சிபிஐ, முக்கிய துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் தான்பாத் மாவட்ட தலைமை நீதிபதி உத்தம் ஆனந்த் என்பவர் கடந்த ஜூலை 28ம் தேதி, காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பின்னால் வந்த ஆட்டோ ரிக்ஷா ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை வழக்கு சிபிஐ., வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இக்கொலை குறித்து விசாரணையை சிபிஐ துவக்கி உள்ளது. மேலும், முக்கிய துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் சிபிஐ அறிவித்துள்ளது. 7827728856, 011-24368640 மற்றும் 24368641 எண்களுக்கு தொடர்பு கொண்டு துப்பு கொடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2824351