
மதுரை; நடிகை மீரா மிதுன் டுவிட்டரில் ஒரு சமூகத்தினர் குறித்து வெளியிட்ட வீடியோவால் சைபர் கிரைம் போலீசார் 7 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர்.
மீராமிதுன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் , “திரைப்படத்துறையில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மலிவான விசயங்களை செய்கிறார்கள். அவர்களை திரைப்படத்துறையில் இருந்து வெளியேற்ற வேண்டிய நேரம் இது”. இவ்வாறு அவர் பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.

இந்நிலையில், மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் தமிழகத்தைச் சேர்ந்த சில அமைப்புகள் புகார் அளித்தனர். இப்புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார், வன்கொடுமை தடுப்புச்சட்டம், அவதூறாக பேசுவது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் மீரா மிதுன் மீது 7 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2819030