
ரூ.160 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் பிரபல ஜவுளி நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்துள்ளது.பதிவு:
ஜூலை 18, 2021 07:51 AM
புதுடெல்லி,
மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் எஸ் குமார்ஸ் நேஷன்வைட் லிட். என்ற பிரபல ஜவுளி நிறுவனம் யூனியன் வங்கியில் இருந்து கோடி கணக்கில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளது தெரியவந்துள்ளது. அதாவது இந்த நிறுவனம் பெற்ற கடனால் கடந்த 2013-18-ம் ஆண்டு காலத்தில் யூனியன் வங்கிக்கு ரூ.160.68 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த மோசடி தொடர்பாக யூனியன் வங்கி அளித்த புகாரின் பேரில் மேற்படி எஸ் குமார்ஸ் நேஷன்வைட் லிட். ஜவுளி நிறுவனம் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நிதின் கஸ்லிவால், இயக்குனர்கள் விஜய் கோவர்தன்தாஸ் காலன்ட்ரி, அனில் குமார் சன்னா, ரஜிந்தர் கிரிஷன் கார்க் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.