
தேனி, அல்லி நகரில் 1941 ஜூலை 17ல் பிறந்தவர், பாரதிராஜா. இயற்பெயர், சின்னச்சாமி. சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்தவர் சினிமா மோகத்தில் அரசு வேலையை உதறி, சென்னைக்கு வந்தார். மேடை நாடகம், வானொலி நிகழ்ச்சி, பெட்ரோல் பங்க் என பல்வேறு வேலைகளில் ஈடுபட்டவாறே, சினிமாவில் வாய்ப்பு தேடினார்.இயக்குனர்கள் பி.புல்லையா, புட்டண்ணா ஆகியோரிடம் சினிமா நுணுக்கங்களை கற்றார். 1978-ல் இவர் இயக்கிய முதல் படமான 16 வயதினிலே மாபெரும் வெற்றி பெற்றது.தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். பாக்யராஜ், ராதிகா, மணிவண்ணன், விஜயசாந்தி, கவுண்டமணி, கார்த்திக், ரேவதி உள்ளிட்ட பலரை அறிமுகம் செய்தவர்.
தாஜ்மஹால், கருத்தம்மா உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளார். இவரது முதல் மரியாதை படம், 1986-ல் தாஷ்கண்ட் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பத்மஸ்ரீ மற்றும் தேசிய விருதுகள் ஆறு, மாநில அரசு விருது மூன்று உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.’இயக்குனர் இமயம்’ பாரதிராஜா பிறந்த தினம் இன்று!
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2803520