
தமிழில் பையா, அயன், சுறா, சிறுத்தை, வீரம், தேவி, உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் பையா, அயன், சுறா, சிறுத்தை, வீரம், தேவி, உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். அவருக்கு பாகுபலி இன்னொரு திருப்பு முனை படமாக அமைந்தது. தற்போது 7 தெலுங்கு படங்களிலும், இரண்டு இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தமன்னா, தற்போது புதிதாக புத்தகம் எழுதி எழுத்தாளராகவும் மாறி இருக்கிறார். பண்டைய கால இந்திய மக்களின் வாழ்க்கை முறைகள் மூலம் நோய்களை தடுத்து ஆயுட் காலத்தை நீட்டிக்கும் வழி முறைகள் குறித்து புத்தகத்தில் அவர் எழுதி உள்ளார்.
இந்த புத்தகம் குறித்து தமன்னா கூறும்போது, “இது நான் எழுதிய முதல் புத்தகம் என்பதால் அதிக மக்களை சென்று சேர வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த புத்தகத்தின் மூலம் நமது பழங்கால மக்களின் வாழ்க்கை முறைகளை மக்கள் புரிந்து கொள்வார்கள். வேகமான இன்றைய உலகத்தில் மக்கள் கலாசார பண்பாட்டை அறிந்து கொள்வது முக்கியம்” என்றார்.
Source: https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/08/24235358/Writer-Tamanna.vpf