
இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை.
மேலும் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புடன் இப்படம் நேற்று அமேசான் பிரைமில் நேரடியாக வெளியானது.
70-களில் நடத்த குத்து சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் வெளியானது முதல் அனைவரிடமும் சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமாகியுள்ளவர் நடிகர் ஷபீர்.
இவர் இப்படத்திற்கு முன் பேட்ட, டெட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: https://cineulagam.com/article/sar-pay-dan-ros-1626984546