
நடிகர் பிரகாஷ் ராஜ் இவர் வில்லன் வேடத்தில் நிறைய படங்கள் நடித்து அதையும் ரசிக்க வைத்துள்ளார்.
கில்லி படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்திற்கு இப்போதும் ரசிகர்கள் ஏராளம். செல்லம் என அவர் எந்த மேடையில் கூறினாலும் ரசிகர்களின் கைதட்டல் கிடைக்கும்.
பிரகாஷ் ராஜ் அவரது வீட்டில் எங்கேயோ தவறி விழுந்துள்ளார், எனவே அவருக்கு தோல்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
எனவே சிகிச்சைக்காக அவர் ஹைதராபாத் செல்வதாகவும் எனக்காக மட்டும் வேண்டிக் கொள்ளுங்கள் என அவரே டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
ரசிகர்களும் நீங்கள் சீக்கிரம் குணமாகிவிடுவீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Source: https://cineulagam.com/article/prakash-raj-admitted-in-hospital-1628655911