தொலைக்காட்சி நிகழ்ச்சியில் புகழ் பெற்ற ஷோவாக இருப்பது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. கடந்த பல ஆண்டுகளாக 8 சீனியர் சீசன்களை நடித்தி வருகிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி வெற்றியை பெற்றவர்கள் தற்போது ஏதாவது ஒன்றினை செய்து பிரபலங்களாகி வருகிறார்கள்.
அந்தவகையில், சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 வில் போட்டியாளராக கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை பிடித்து 2 லட்ச ரூபாயை பரிசாக பெற்றார். இதையடுத்து முன்னணி இசையமைப்பாளர்களான ஜிவி பிரகாஷ், இமான், ஜிப்ரான் உள்ளிட்டவர்களின் பாடலுக்கு பாடி அசத்தினார்.
தற்போது இளம் நடிகைகளுக்கு இணையாக போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாகி வருகிறார்.