தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் நடிகர்களில் ஒருவர் விஷால். இவரது நடிப்பில் கடைசியாக சக்ரா திரைப்படம் வெளியாகி இருந்தது.
அப்படத்தை தொடர்ந்து விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் Enemy என்ற படம் தயாராகி இருக்கிறது. இப்படம் எப்போது வெளியாகும் என சரியாக தெரியவில்லை.
கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஷால் தனது 31வது படத்திற்காக ஹைதராபாத் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார்.
ஏற்கெனவே அப்பட படப்பிடிப்பில் விஷாலுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.
தற்போது மீண்டும் படப்பிடிப்பில் அவருக்கு அதே இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாம். சிகிச்சைக்கு பிறகு தற்போது விஷால் நன்றாக இருப்பதாக கூறப்படுகிறது.
Source: https://cineulagam.com/article/vishal-injured-at-shooting-spot-1626847531