
”வாழு வாழவிடு அவ்ளோதான் தத்துவம் அதுல கால விட்டா ஒடச்சிடுவோம்” என எச்சரிக்கை விடுக்கும் வரிகளும் பாடலில் இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு ‘வலிமை’ படத்தின் முதல் பாடலை வெளியிட்டு அஜித் ரசிகர்களைப் பரவசப்படுத்தியிருக்கிறது படக்குழு. விக்னேஷ் சிவன் எழுதியிருக்கும் இந்தப்பாடல்தான் படத்தின் ஓப்பனிங் பாடல். யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘’நாங்க வேற மாறி’’ எனத் தொடங்கும் இந்தப்பாடலின் ஸ்பெஷல் என்ன?
முழுக்க முழுக்க அஜித் அதிகம் பயன்படுத்தும் வாழ்க்கைத் தத்துவ வரிகளைக் கொண்டு எழுதியிருக்கிறார் விக்னேஷ் சிவன். ‘’நாங்க வேற மாறி’’ எனத்தொடங்கும் இந்தப் பாடலின் முதல் வரிகள் கிறிஸ்தவப் பாடலாக ஏற்கெனவே இணையத்தில் பிரபலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

‘’எல்லா நாளுமே நல்ல நாளுதான்
எல்லா நேரமும் நல்ல நேரம்தான்
எல்லா ஊருமே நம்ம ஊருதான்
எல்லா பயலும் நல்ல பயதான்”
எனப் பிரிந்து மோதும் ரசிகர்களுக்கு கருத்து சொல்வதுடன் பாடல் தொடங்குகிறது.
“மேல இருக்கவனை நம்ப நல்லா கத்துக்கோ
கூட இருக்கவனை நட்பா நல்லா வெச்சுக்கோ
காலை வாராம வாழ மட்டும் கத்துக்கோ
காலத்தோட நீயும் ஓட கத்துக்கோ”
என இந்த வரிகளில் தனது ரசிகர்களுக்கு விக்னேஷ் சிவன் மூலம் வாழ்க்கைத் தத்துவங்களை சொல்லியிருக்கிறார் அஜித்.
அடுத்து…
‘’தக தகனு மின்னலாம் தெனாவட்டா துள்ளலாம்
வளவளன்னு பேசாமா வேலையை செஞ்சா
கடகடன்னு ஏறலாம்… வேற மாறி மாறலாம்
வரை முறைய மாத்தலாம் நல்லது செஞ்சா” என ரைமிங்கில் எழுதியிருக்கிறார் விக்கி.
“உன் வீட்டை மொத பாரு
அட தானாவே சரியாகும் உன் ஊரு
கருத்து சொல்ல நான் ஞானி இல்ல
ஆனா, எடுத்து சொன்னா எந்த தப்பும் இல்ல
நாளைக்கு நிம்மதியா நீ இருக்க
இன்னைக்கு இறங்கி செதுக்கிடணும்
உன் எண்ணத்தை அழகா அமைச்சிக்கிட்டா
எல்லாமே அழகாகும் சரியாகும்”
என முழுக்க முழுக்க அஜித்தின் ரசிகர்களின் மனதில் கொண்டு இந்தப் பாடல் வரிகள் எழுதப்பட்டிருக்கின்றன.

அஜித் எப்போதும் உச்சரிக்கும் ‘வாழு வாழவிடு’ வரிகளும் மிஸ் ஆகாமல் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளது. கூடவே மற்றவர்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
“வாழு வாழவிடு அவ்ளோதான் தத்துவம்
அதுல கால விட்டா ஒடச்சிடுவோம்
கால வாராம வாழ மட்டும் கத்துக்க கண்டுபிடிச்சிட்டா
தக தகனு மின்னலாம் தெனாவட்டா துள்ளலாம்’’ எனத் தொடர்கிறது விக்னேஷ் சிவனின் வரிகள்.
பாடல் நேற்று இரவு வெளியானதில் இருந்தே தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்கிறது!
Source: https://cinema.vikatan.com/tamil-cinema/how-is-ajith-kumars-valimai-song-naanga-vera-maari