ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதி்க்க விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் 1 லட்சம் ரூபாய் அபராதத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இரண்டு வார காலத்தில் செலுத்த விஜய்க்கு ஆணையும் பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து விஜய்க்கு ஆதரவான ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்ட் ஆகின.
இந்நிலையில் பிரபல நடிகையும், பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் விஜய்க்கு ஆதரவாக டுவிட் செய்துள்ளார்.
அதில், ஏழை மக்கள் பலருக்கும் விஜய் நிஜ வாழ்க்கையில் ஹீரோ தான், கொரோனா நிவாரண நிதியை வழங்கியுள்ளார்.
ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவியுள்ளார், ரசிகர்களின் குடும்பங்களுக்கு உதவுகிறார்.
நீதிமன்றத்தில் நுழைவு வரியிலிருந்து விலக்கு கேட்டாரே தவிர, கட்டமாட்டேன் என்று அவர் சொல்லவில்லை.
நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிமன்றத்தில் முடிந்து விட்டது, இதை காரணமாக கொண்டே அவர் செய்த நல்ல விடயங்களை மறந்துவிடக்கூடாது என தெரிவித்துள்ளார்.
Source: https://news.lankasri.com/article/bjp-gayatri-raguram-supports-actor-vijay-1626253544