
சத்தீஷ்காரில் நக்சல் ஆதிக்கம் நிறைந்த கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் மின் வினியோகம் கிடைத்துள்ளது.
சுக்மா,
சத்தீஷ்காரில் சுக்மா மாவட்டத்தில் நக்சல் ஆதிக்கம் நிறைந்த மின்பா என்ற கிராமத்தில் 30 ஆண்டுகளாக மின் வினியோகம் இல்லாமல் இருந்துள்ளது.
இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த கிராமத்திற்கு மின்சார வினியோகம் கிடைத்துள்ளது. இதுபற்றி மாவட்ட எஸ்.பி. சுனில் சர்மா கூறும்போது, சுதந்திர தினத்தினை முன்னிட்டு மக்களின் வாழ்வில் ஒளியை கொண்டு வருவதற்காக அனைத்து வீடுகளுக்கும் பல்புகள் வழங்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.
Source: https://www.dailythanthi.com/News/India/2021/08/15062451/Power-supply-to-Naxal-dominated-village-in-Chhattisgarh.vpf