
மத்தியப் பிரதேசத்தில் பழுதான ரெயிலை கைகளால் தள்ளிச் சென்ற நிகழ்வு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
போபால்
மத்தியப் பிரதேச ஹர்தா ரெயில் நிலையத்தின் அருகில் தகமர் என்ற இடத்தில் நடுவழியில் பழுதான ரெயிலை ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்திற்கு ரெயில்வே ஊழியர்களும், பொதுமக்களும் இணைந்து கைகளால் தள்ளிச் சென்றனர்.
அவர்களில் சிலர் காலணி கூட அணியாமல் கூர்மையான ஜல்லிக்கற்களில் மிகவும் சிரமப்பட்டு ரெயிலைத் தள்ளிச் சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தப் பணி குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
Source: https://www.dailythanthi.com/News/India/2021/08/30165038/Employees-pushing-a-junk-train.vpf