கூகிள் கணக்கை டெலீட் செய்ய விரும்பும் நபர்கள், உங்களின் அக்கௌன்ட் உடன் இணைக்கப்பட்டுள்ள டேட்டாக்களை பேக்அப் எடுத்துக்கொள்வது சிறந்தது.
கூகிளில் உள்ள உங்களின் எல்லா தரவையும் எவ்வாறு பேக்அப் செய்து, உங்களின் Google கணக்கை எப்படி நீக்குவது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
எளிமையாக பேக்அப் எடுக்க
- பேக்அப் எடுக்க விரும்பாத ஆப்ஸ் டேட்டா அல்லது மற்ற தேவையற்ற டேட்டாக்களை நீக்க செக் பாக்சில் உள்ள டிக் மார்க்கை நீக்கிவிடுங்கள்.
- இதைச் செய்த பிறகு Next என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யுங்கள். உங்கள் தரவு எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்று அடுத்த பகுதி உங்களிடம் கேட்கும்.
- அதை நேரடியாக மற்றொரு கிளவுட் சேமிப்பகத்திற்கு மாற்ற வேண்டுமா என்று கூகிள் கேட்கும் அல்லது அனைத்து தரவும் தயாரானதும் அதைப் உங்கள் ஸ்டோரேஜில் பதிவிறக்குவதற்கான இணைப்பை காட்டும்.
- அடுத்து எக்ஸ்போர்ட் செய்யும் Export Once விருப்பங்களை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் பெற விரும்பும் ஃபைல்களின் வகை மற்றும் அளவைத் தேர்ந்தெடுக்கவும்.
- இறுதியாக, Create Export என்பதைக் கிளிக் செய்து, . உங்கள் டேட்டா அனைத்தும் சேகரிக்கப்பட்டு ஒரு டௌன்லோட் லிங்க் வழங்கப்படும். பின்னர் டவுன்லோட் லிங்க் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.
கூகிள் accountஜை Delete செய்ய
- myaccount.google.com என்ற கூகிள் அக்கௌன்ட் பக்கத்திற்குச் செல்லுங்கள்.
- நீங்கள் டெலீட் செய்ய விரும்பும் கூகிள் அக்கௌன்டை லாகின் செய்யுங்கள்.
- Data and Personalisation செலக்ட் செய்யுங்கள்.
- Download and Delete Your Data என்ற விருப்பத்தைத் தேடி கிளிக் செய்யுங்கள்.
- Delete a service or your account என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
- Delete your account கிளிக் செய்ததும் கூகிள் மீண்டும் உங்கள் அக்கௌன்டை லாகின் செய்யச் சொல்லும்.
- கூகிள் இப்போது உங்களுக்கு பேக்அப் செய்வதற்கான இறுதி வாய்ப்பை வழங்கும்.
- இறுதியாகப் பக்கத்தின் இறுதியில் உள்ள Delete Account விருப்பத்தை கிளிக் செய்து, உங்கள் கூகிள் அக்கௌன்டை டெலீட் செய்யுங்கள்.
Source: https://news.lankasri.com/article/how-to-delete-your-google-account-easily-1625745409