
ரியல்மி நிறுவனம் ஜி.டி. சீரிஸில் மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 6.43 அங்குல அமோலெட் திரை, மற்றும் 6 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம் கொண்டது. இதன் நினைவகத் திறன் 256 ஜி.பி. ஆகும். இதில் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் 788 ஜி பிராசஸர் மற்றும் பின்புறம் 64 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது.
செல்பி பிரியர்களுக்கென முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டதாகவும், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உடையதாகவும் இது உருவாக்கப் பட்டுள்ளது. திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 4,300 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 63 வாட் அல்ட்ரா பாஸ்ட் சார்ஜருடன் வந்துள்ளது. வெள்ளை, கருப்பு மற்றும் கிரே வண்ணங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.25,999.
Source: https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2021/08/26202753/Realme-GT-Master-Edition.vpf