
ஜூபிடரின் நிலவான யூரோப்பாவை ஆய்வு செய்யும் Europa Clipper திட்டத்திற்கு, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஃபால்கன் ஹெவி ராக்கட்டை பயன்படுத்த, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா முடிவு செய்துள்ளது.
178 மில்லியன் டாலர் செலவில் மேற்கொள்ள உள்ள இந்த திட்டத்தில், வரும் 2024 ஆம் ஆண்டு அக்டோபரில், புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, கேமராக்கள், ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் உள்ளிட்ட தனித்துவமான உபகரணங்களை சுமந்து கொண்டு, ஃபால்கன் ஹெவி ராக்கெட் விண்ணில் பாயும். பூமியில் இருந்து 630 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள யூரோப்பாவை அடைய 5 ஆண்டுகளுக்கு பயணம் செய்ய வேண்டும்.
ஜூபிடரின் நிலவான யூரோப்பா பனிக்கட்டிகளால் ஆனது. அங்கு உயிர் வாழ்வதற்கான ஆதாரச்சூழல் உள்ளதா என்பதை நாசாவின் Europa Clipper ஆராயும். முதலில் Europa Clipper-ஐ தனது SLS ராக்கெட் மூலம் அனுப்ப நாசா திட்டமிட்டிருந்தது. அதிக செலவினம் மற்றும் தாமதம் கருதி ஸ்பேஸ் எக்சின் ராக்கெட் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Source: https://canadamirror.com/article/elon-musks-spacex-rocket-used-for-europa-clipper-1627158345