
உங்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழை சில நிமிடங்களில் WhatsApp-ல் பெறலாம்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் 2 தவணை செலுத்திக்கொண்டால் மட்டும் போதாது. அதைத் தெரியப்படுத்தி சான்றளிக்கும் இந்திய சுகாதார அமைச்சகத்தின் சான்றிதழ் மிக முக்கியம்.
குறிப்பாக பயணங்களின்போதும், விடுதிகளில் தங்கும்போதும் பெரும்பாலும் இந்த தடுப்பூசி சான்றிதழைக் கேட்பது வாடிக்கையாகிவிட்டது.
எல்லோரும் இந்த சான்றிதழைப் பெற்று கைகளிலோ, சட்டைப்பையிலோ, பேண்ட் பையிலோ வைத்துக்கொண்டு அலைவது கடினமானது.
இப்போது இந்த சான்றிதழைப் பெற்று பத்திரப்படுத்த இந்திய சுகாதார அமைச்சகம் ஒரு புதிய வசதியைக் கொண்டு வந்து இருக்கிறது.
இதைப் பெறுவதும் எளிது. உங்கள் செல்போனில் 91 9013151515 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு ‘covid certificate’ என டைப் செய்து அனுப்பினால் போதும்.
தடுப்பூசி போடுவதற்கு எந்த செல்போன் எண்ணை பயன்படுத்தினீர்களோ அந்த எண்ணை கேட்டு ‘வாட்ஸ் அப்’பில் தகவல் வரும்.
எண்ணை தெரிவித்தவுடன் OTP (ஒரு நேர கடவுச்சொல்) வரும். அந்த OTP-யை நீங்கள் தெரிவிக்கிறபோது, அடுத்த சில நிமிடங்களில் pdf வடிவில் உங்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வந்து விடும்.
அதை செல்போனில் நீங்கள் பத்திரப்படுத்திக்கொள்ளலாம். கேட்கிற இடங்களில் காட்டிக்கொள்ளலாம். இந்த தகவலை இந்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியாவின் அலுவலகம், டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
Source: https://news.lankasri.com/article/how-to-get-covid-19-vaccine-certificate-whatsapp-1628556853