
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகண்ட சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் சென்ற வருடம் துவங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இதில் கதாநாயகன் மாயன் கதாபாத்திரத்தில், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த மிர்ச்சி செந்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் மாயன் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஜனனி. இவர் இதற்கு முன் மௌன ராகம், செம்பருத்தி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை ஜனனி தனது கையில் டாட்டூ குத்தியுள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..