இந்தோனேசியாவை சேர்ந்த இளைஞர் ஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவை சேர்ந்த இளைஞர் நீண்ட நாளாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர்கள் வேற ஒரு பெண்ணை பார்த்து நிச்சயம் செய்துவிட்டனர்.
இந்நிலையில் திருமணம் நடக்கும் மண்டபத்தில் திடீரென்று புகுந்த காதலி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு குட்டி கலாட்டா செய்தார்.
இரண்டு பெண்களுக்கு நடுவே சிக்கி கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்துள்ளார். இந்நிலையில் இரண்டு பெண்களையும் ஒரு வழியாக சம்மதிக்க வைத்து ஒரே மேடையில் திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிகழ்வு அங்கு வருகை தந்த அனைவருக்கும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. இளைஞர் ஒருவர் ஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலாக பரவி வருகின்றது.
Source: https://news.lankasri.com/article/indonesia-men-married-to-2-girls-became-viral-news-1627880309