
தற்போதைய கொரோனா காலக்கட்டத்தில் நோய் எதிரப்பு சக்தியை அதிகப்படுத்த உணவுகளும் ஒரு முக்கிய பங்காக உள்ளது.
இருப்பினும் நாம் சாப்பிடும் சில உணவுகள் நம்மை அறியாமலேயே நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கக்கூடியவை. அத்தகைய உணவுகளில் இருந்து விலகி இருப்பதே நல்லது.
அந்தவகையில் நோய் எதிரப்பு சக்தியை பலவீனப்படுத்தும் உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- குழந்தைகள் ஐஸ்கிரீம்களை விரும்பி சாப்பிடுவார்கள். அதில் சாச்சுரேட்டட் கொழுப்பு(saturated fat ) மற்றும் சர்க்கரை அதிகம் கலந்திருக்கும். அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும்.
- சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும் சாக்லேட்டுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அதிலிருக்கும் சர்க்கரை நோயெதிர்ப்பு மண்டலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.
- ஒயின், பீர் உள்பட எந்தவகையான மதுவாக இருந்தாலும் அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை கடுமையாக பாதிக்கச் செய்துவிடும்.
- எனர்ஜி பானங்களும் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு இடையூறானவை. அதில் இருக்கும் காபின் தூக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இரவில் சரியாக தூங்காவிட்டால் அதுவே நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாடுகளை மோசமாக்கி விடும்.
- எண்ணெய்யில் பொரித்த உணவுகள், உருளைக்கிழங்கில் தயாராகும் சிப்ஸ்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு எதிரானவை. அவற்றில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகள் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
- துரித உணவுகளும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தக்கூடியவை. அதில் கலோரிகள், கொழுப்புகள், சர்க்கரை, சோடியம் போன்றவை அதிகம் கலந்திருப்பதனால் இவற்றை தடுப்பது நல்லது.
- பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பு அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும். உப்பில் கலந்திருக்கும் சோடியம் நோய் எதிர்ப்பு செயல்பாடுகளை முடக்கும்.
Source : https://news.lankasri.com/article/foods-that-weaken-your-immune-system-1625721792