பொதுவாக நம்மில் பலருக்கு கசப்பான உணவுகள் பிடிக்கவே பிடிக்காது. கசப்பு உணவுகளை பார்த்தாலே சாப்பாடே வேண்டாம் என ஒதுக்கி விடுவார்கள். உண்மையில் கசப்பு சுவை நிறைந்த உணவுகள் உடலுக்கு பல அற்புத நன்மைகள் தரக்கூடியது.
பல நோய்களில் இருந்து நம்மை பாதுக்காக்க பெரிதும் உதவுகின்றது. இதனை தினமும் உணவில் சேர்த்து கொள்வதனால் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் பலத்தையும் வழங்குகின்றது.
அந்தவகையில் தற்போது நாம் வேண்டாம் என ஒதுக்கும் ஒரு சில கசப்பு உணவுகளும், அதனுள் ஒளிந்துள்ள நன்மைகளை பற்றியும் தெரிந்து கொள்வோம்.
- பாகற்காய் பல்வேறு வகையான புற்றுநோய்களின் வளர்ச்சியைக் குறைக்கின்றது. அதுமட்டுமின்றி, நீரிழிவு நோய் உள்ளவர்களின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கின்றது, .தொடர்ந்து நான்கு தினமும் உலர்ந்த பாகற்காய் தூளை எடுத்துக் கொள்வதன் மூலம் நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவு கணிசமாகக் குறைவது .
- கோரியோப்சிஸ் குடும்பத்தில் உள்ள ப்ரோக்கோலி, பிரஸ்ஸல் ஸ்ப்ரவுட், முட்டைக்கோஸ், காலே, முள்ளங்கி மற்றும் அருகுலா போன்ற காய்களில் குளுக்கோசினோலேட்டுகள் எனப்படும் சேர்மங்கள் உள்ளன. அவை தான் இந்தக் காய்களுக்கு கசப்பு சுவையையும், பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகின்றன. புற்றுநோயை உற்பத்தி செய்யும் உயிரணுக்களின் வளர்ச்சியையும், அதன் செயல்பாட்டையும் மெதுவாக்கும், உங்கள் கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்கி, சிறப்பாக செயல்பட உதவுகின்றன.
- டேன்டேலியன்ஸ் இலைகளை நீங்கள் சாலட்களில் சேர்த்து பச்சையாகவும் சாப்பிடலாம். அல்லது வதக்கி சைட் டிஷ் ஆகவோ, சூப்கள் மற்றும் பாஸ்தாக்களில் சேர்த்து உண்ணலாம். டேன்டேலியன் இலைகள் மிகவும் கசப்பானவை கண்களை கண்புரை போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. டேன்டேலியன் கீரைகள் இனுலின் மற்றும் ஒலிகோ ப்ரக்டோஸின் போன்ற ப்ரீபயோடிக்குகளின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. இந்த ப்ரீபயோடிக்குகள் தான், குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
- எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் திராட்சைப் பழம் போன்றசிட்ரஸ் பழங்களின் சுவை இனிப்பு அல்லது புளிப்பு சுவை கொண்டவையாக இருந்தாலும், அந்தப் பழங்களின் வெளிப்புற தோல்கள் மிகவும் கசப்பானவை. தோல் பகுதிகளில் பிளாவனாய்டுகள் இருப்பதால் தான் இந்த கசப்பு தன்மை ஏற்படுகிறது.இந்த சிட்ரஸ் பிளாவனாய்டுகள் அழற்சியைக் குறைக்கவும், புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை குறைத்து, அதனை எதிர்த்துப் போராட உதவும்.
- காபியில் உள்ள குளோரோஜெனிக் அமிலம் என்ற பாலிபினால் ஒரு வலுவான ஆக்ஸிஜனேற்றியாகும். இது ஆக்ஸிஜனேற்ற சேதம், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் போன்ற நோய்களின் அபாயத்தை குறைக்கும். அதேபோல் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை 7 சதவீதம் குறைக்க தினமும் காபி குடிப்பது நல்லது. அதுமட்டுமின்றி, அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய் உள்ளிட்ட நரம்பியல் கோளாறுகளைத் தடுக்க காபியில் உள்ள காபினேட்டட் உதவக்கூடும்.
- குருதிநெல்லி அல்லது கிரான்பெர்ரி என்ற பழம் புளிப்பு மற்றும் கசப்பு நிறைந்த ஒரு பெர்ரி பழம் ஆகும். இவை பல் சிதைவைக் குறைப்பதற்கும், வயிற்றில் ஏற்படும் எச் பைலோரி நோய்த் தொற்றின் அபாயத்தைக் குறைப்பதற்கும், குடல் மற்றும் சிறுநீர்க் குழாயில் ஏற்படும் ஈ கோலை நோய்த்தொற்றுகளைத் தடுப்பதற்கும் உதவும். ஒவ்வொரு நாளும் சுமார் இரண்டு கப் அளவு கிரான்பெர்ரி ஜூஸை குடிப்பது எச் பைலோரி நோய்த் தொற்றுகளை திறம்பட அகற்ற உதவும். கிரான்பெர்ரி பழங்களில் நம்பமுடியாத அளவிற்கு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது வீக்கத்தைக் குறைக்கவும், இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் அளவை நிர்வகிக்கவும் உதவும்.
- கோக்கோ தூள் கோக்கோ செடியின் விதைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதனை சாக்லேட் தயாரிக்க, கோக்கோ வெண்ணெய், கோக்கோ பானம் போன்றவற்றில் பயன்படுத்துகின்றனர். கோக்கோவில் காணப்படும் பாலிபினால்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள், இரத்த நாளங்களை அகலப்படுத்தி இதய வீக்கத்தைக் குறைத்து, உங்கள் இதயத்தைப் பாதுகாக்கும்.
- கிரீன் டீயும் உலகின் பல பகுதி மக்களால் அருந்தப்படும் பானமாகும். இதில் உள்ள கேடசின் மற்றும் பாலிபினால் இதற்கு இயற்கையாகவே இதற்கு கசப்பான சுவைக் கொடுக்கும். கிரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அழற்சி எதிர்ப்பு மருந்துகளாக செயல்படுகின்றன. அதேபோல் ப்ரீ ரேடிக்கல்கள்களால் ஏற்படும் சேதத்தையும், இதய நோய்க்கான ஆபத்தையும் கிரீன் டீ குறைக்கின்றன. தினமும் ஒரு கப் கிரீன் டீ குடிப்பது 20 சதவீத மாரடைப்பு அபாயத்தை நீக்கும்.
- ரெட் ஒயின் உங்கள் குடலுக்கு நல்லது. தினமும் இரண்டு கிளாஸ் ரெட் ஒயின் குடிப்பதால் குடல் ஆரோக்கியத்துக்கான பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் . மேலும், இரத்த நாளங்களில் படியும் கொழுப்பின் அளவைக் குறைத்து, நாளங்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க ரெட் ஒயின் உதவும். அதேபோல் ரெட் ஒயின் குடிப்பதால் நீண்ட ஆயுள், நீரிழிவு நோய் ஆபத்து குறைவு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் ஆபத்து குறைவது போன்ற நன்மைகள் நமக்கு கிடைக்கும்.
Source: https://news.lankasri.com/article/9-bitter-foods-and-that-health-benefits-1626497559