
சென்னை : ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை தமிழக அரசு விரைவில் செயல்படுத்துகிறது; சர்க்கரை நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று மாத்திரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த ஒன்றரை ஆண்டாக தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு கவனம் செலுத்தி வந்தது. சர்க்கரை ரத்த அழுத்த நோய்க்கு மாத்திரை வாங்குவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விரைவில் மருத்துவக்கல்லுாரி தலைமை அரசு மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து ‘மக்களைதேடி மருத்துவம்’ என்ற திட்டம் துவங்கப்படுகிறது.

முதல் கட்டமாக 32 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லுாரிகளில் சர்க்கரை ரத்த அழுத்த நோய்க்கு எவ்வளவு பேர் மாத்திரை பெறுகின்றனர்.

வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி பாதிப்பு உள்ளவர்களின் வீடுகளுக்கே சென்று மாத்திரை வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2804380