
புதுடில்லி: மாநிலங்களின் கையிருப்பில் 2.75 கோடி கோவிட் தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று (ஆக., 3) வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. அதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இலவசமாக இதுவரை 49,85,51,660 கோவிட் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு உள்ளன. அதில், 47,52,49,554 தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டு உள்ளன.

மாநிலங்களில் கையிருப்பில் 2,75,88,573 தடுப்பூசிகள் உள்ளன. மேலும், 20,94,890 தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளன.
இதுதவிர, நாடு முழுவதும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை 49.85 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2815592