
புதுடில்லி: நாடு முழுவதும் இதுவரை 55 கோடி கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கோவிட் தடுப்பூசிகளின் அளவு சாதனை படைக்கும் விதமாக 55 கோடியைக் கடந்து விட்டது. கோவிட் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை வலுப்படுத்துவோம்; தடுப்பூசி செலுத்துவோம்’ எனத் தெரிவித்து உள்ளார்.
![]() |
ஒரே நாளில் 86.26 லட்சம்
நாடு தழுவிய கோவிட் தடுப்பூசி இயக்கம் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. தடுப்பூசிகளை செலுத்தும் இலக்கில் 10 கோடியை எட்ட இந்தியாவுக்கு 85 நாட்கள் ஆனது. 20 கோடியைக் கடக்க 45 நாட்களும், 30 கோடியைக் கடக்க 29 நாட்களும் ஆனது. அடுத்த 24 நாட்களில் 40 கோடி தடுப்பூசிகளும், ஆகஸ்ட் 6ம் தேதியுடன் 50 கோடி தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் ஆக., 14ம் தேதி செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 54. கோடியைத் தாண்டியது. இதுவரை இல்லாத எண்ணிக்கையாக, நேற்று ஒரே நாளில் 86.26 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2825105