
கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளாக உருமாறி மக்களை ஈவு இரக்கமில்லாமல் தாக்கி வருகின்றது. கொரோனாவை முற்றிலும் அழிக்க அரசு பல வழிகளை கையாண்டாலும் அது முற்றிலும் தோல்வியிலே முடிவடைகிறது.
இருப்பினும் கடைசி ஆயுதமாக தடுப்பூசி செயல்பட்டு வருகின்றது. மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் குறித்து பல கேள்விகள் உள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொள்வது நல்லதா? தடுப்பூசி செலுத்தி கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படுமா? என பல கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளது.
நிபுணர்களின் கூற்று:-
- கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு உணவை ஒருவர் பின்பற்ற வேண்டியதில்லை. ஆனால் ஆரோக்கியமான சீரான உணவுக்கு ஒருவர் செல்ல வேண்டும் என்பது முக்கியம்.
- முட்டை, சிக்கன் போன்ற உணவுகளில் புரத சத்து அதிகமாக உள்ளதால் இயற்கையாவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்க இவை தூண்டுகோளாய் அமையும்.
- ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவுகளை மட்டும் ஆராய்ந்து சாப்பிடுவது அவசியம்.
முட்டை சாப்பிடுவது நல்லதா?
- ஒரு பெரிய முட்டையில் சுமார் 6 கிராம் புரதம் உள்ளது. இது உங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்தின் ஆரோக்கியமான ஊக்கத்தை அளிக்கும்.
- முட்டைகளில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. அவை மனித உடலால் தொகுக்க முடியாதவை. எனவே அவை நாம் உண்ணும் உணவில் இருந்து மட்டுமே பெற முடியும்.
Source: https://news.lankasri.com/article/can-we-eat-non-veg-food-after-vaccination-1627814747