பேன் பிரச்சினை பெரியவர்கள் வரை சிறுவர்கள் வரை அனைவரும் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளிலும் ஒன்றாகும்.
இதனை போக்க எத்தனையோ செயற்கை பொருட்கள் இன்று சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் இது நிரந்தமாக தீர்வினை தராது.
இதற்கு வீட்டில் இருக்கும் ஒரு சில இயற்கை பொருட்களை கொண்டு எளிய முறையில் இதிலிருந்து விடுதலை பெற முடியும். தற்போது அவை என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
தேவையானவை
- வெள்ளைப்பூண்டு – 3 பல்
- எலுமிச்சை சாறு – அரை
- தேங்காய் எண்ணெய்
செய்முறை
- முதலில் பூண்டை நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து வைத்து கொள்ளவும். இதனுமடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
- இதனை நன்றாக மிக்ஸ செய்து கொள்ளவும். முதலில் நன்றாக தலைக்கு குளித்தப்பின் இந்த பேஸ்டை தேய்க்கவும். தலைமுடிக்கு தேய்க்கமால் தலை முடி வேருக்கு நன்றாக இந்த பேஸ்டை தேய்க்கவும்.
- 1 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி கொள்ளவும்.
- பிறகு தேங்காய் எண்ணெய்யை எடுத்து நன்றாக தூங்கும் முன் தேய்த்து கொள்ளவும். இதனை வாரத்தில் 2 தடவை பின்பற்றினாலே போதும். இது நல்ல பயனை தரும்.
Source: https://news.lankasri.com/article/lic-gum-dandruff-harassment-1626696374