
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் பி.வி.சிந்து.
டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறார்.
அந்த வகையில், இன்று நடந்த காலிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியுடன் மோதினார்
இந்த போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்த சிந்து, யமகுச்சியை 21 -13, 22 – 20 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
காலிறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி, அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய சிந்துவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
Source: https://ibctamilnadu.com/article/tokyo-olympics-sindhu-yamaguchi-semifinal-1627640388