
டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்த மகளிர் குத்துச்சண்டை போட்டியின் ரவுண்ட் 16 சுற்றில் இந்தியாவின் மேரி கோம் தோல்வியை சந்தித்து ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இன்று மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 48-51 கிலோ எடைப்பிரில் நடந்த ரவுண்ட 16 சுற்றில் இந்தியாவின் மேரி கோம், கொலம்பியாவின் valencia மோதினர்.
3 சுற்றுகள் முடிவில் 3-2 என்ற கணக்கில் மேரி கோமை வீழத்தி Valencia வெற்றிப்பெற்றார்.
இந்த தோல்வியின் மூலம் 38 வயதான மேரி கோமின் ஒலிம்பிக் பதக்க கனவு முடிவுக்கு வந்தது
Source: https://news.lankasri.com/article/valencia-beat-marry-kom-in-olymbic-boxing-round-16-1627554667