
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஹாக்கி போட்டியில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் 3 முறை தங்கம் வென்ற அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாற்றில் முதன் முறையாக இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ளது.
ஒலிம்பிக்கில் இன்று Oi ஹாக்கி மைதானத்தில் நடந்த மகளர் ஹாக்கி காலிறுதியில் அவுஸ்திரேலியா-இந்தியா மோதின.
போட்டியின் 22வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை Gurjit Kaur கோலாக மாற்றினார்.
இதன் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி முன்னிலைப்பெற்றது. இறுதிவரை போராடிய அவுஸ்திரேலிய வீராங்கனைகளால் கோல் ஏதும் போட முடியவில்லை.
இதனால், 1-0 என்ற கோல் கணக்கில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறையாக இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதிப்பெற்றது.
புதன்கிழமை நடைபெறவிருக்கும் முதல் அரையிறுதியில் ஜேர்மனியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அர்ஜென்டினாவை இந்தியா எதிர்கொள்கிறது.
Source: https://news.lankasri.com/article/olymbic-women-hockey-india-beat-australia-1627879642