
டோக்கியா ஒலிம்பிக்கில் நடந்த மகளிர் குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
ஒலிம்பிக்கில் இன்று மகளிர் குத்துச்சண்டையில் 64-69 கிலோ பிரிவில் நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் துருக்கி வீராங்கனை SURMENELI Busenaz, இந்திய வீராங்கனை லவ்லினா மோதினர்.
3 சுற்றுகள் முடிவில் 5-0 என்ற கணக்கில் வெற்றிப்பெற்று Busenaz இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றார்.
அரையிறுதியில் தோல்வியடைந்த லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றார். 23 வயதான லவ்லினா தனது முதல் ஒலிம்பிக்கிலே வெண்கலம் வென்றதை பலர் பாராட்டி வருகின்றனர்.
டோக்கியோவில் ஒலம்பிக்கில் இந்தியா வென்ற மூன்றாவது பதக்கம் (ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம்) இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை பளு தூக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி, பேட்மிண்டனில் பிசி சிந்து வெண்கலம், தற்போது குத்துச்சண்டையில் லவ்லினா வெண்கலம் வென்றுள்ளனர்.
Source: https://news.lankasri.com/article/indian-boxer-lovlina-loses-semifinal-get-bronze-1628056701