
டோக்கியோ: ஹாக்கி லீக் போட்டியில் வந்தனா ‘ஹாட்ரிக்’ கோலடித்து கைகொடுக்க இந்திய பெண்கள் அணி 4-3 என, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.
டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி ‘ஏ’ பிரிவில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

இந்தியா சார்பில் வந்தனா (4, 17, 49வது நிமிடம்) ‘ஹாட்ரிக்’ கோலடித்தார். நேஹா கோயல் (32வது நிமிடம்) ஒரு கோலடித்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் டாரின் கிளாஸ்பி (15வது நிமிடம்), கேப்டன் எரின் ஹன்டர் (30வது), மாரிசன் மரைஸ் (39வது) தலா ஒரு கோலடித்தனர்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2813466