
இங்கிலாந்து வீரர் லியம் லிவிங்ஸோடன் இமாலய சிக்ஸர் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
இப்போட்டியில் இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டன் அடித்த ஒரு சிக்ஸர் மைதானத்தை தாண்டி வெளியில் சென்று, ரக்பி மைதானத்தில் சென்று விழுந்தது. லிவிங்ஸ்டன் அடித்த இந்த சிக்ஸர் 122 மீட்டர் வரை சென்றது. இதுவே கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட மிகப்பெரிய சிக்ஸர் என கூறப்படுகிறது. இதன் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Source: https://ibctamilnadu.com/article/liam-livingstone-hits-biggest-six-in-history-1626802368