
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், கோஹ்லியின் வீடியோ ஒன்று இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி, டிரென்ட் பிரிட்ஜ்ஜில் துவங்கியது. இதில் முதல் நாளான நேற்று இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதன் பின் முதல் இன்னிங்ஸ் ஆடி வரும் இந்திய அணி, சற்று முன் வரை 4 விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இந்நிலையில், இப்போட்டியின் போது, பும்ரா வீசிய ஓவரை கோஹ்லி சரியாக கணித்து ரிஷப் பாண்ட்டிடம் பேசிய வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது
அதில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோஸ் பட்லர் 7 ஆவது வீரராக களம் புகுந்து 52 வது ஓவரில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது முதல் நான்கு பந்துகளை சிறப்பாக வீசிய ஜஸ்பிரித் பும்ரா ஓடி வருவதைப் பார்த்து நிச்சயம் இந்த ஓவரில் பட்லர் பும்ராவிடம் ஆட்டம் இழந்து விடுவார் என்று ரிஷப் பண்டை நோக்கி பேசிக்கொண்டே இருந்தார். அவர் கூறியது போலவே அந்த பந்திலேயே பட்லர் பும்ரா பந்தில் எட்ஜாகி ரிஷப் பண்ட் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்
Source: https://news.lankasri.com/article/virat-kohli-predicts-jos-buttler-s-dismissal-1628174898